கும்பமேளாவும் கொரோனாவும் : Kumbh Mela and Corona Second Wave

கும்பமேளா என்றால் என்ன ?

கும்பம் என்றால் பானை. மேளா என்றால் திருவிழா. கும்பமேளா என்றால் பானைகளுடன் கொண்டாடும் திருவிழா என்று அர்த்தம். கும்பமேளா என்பது குறிப்பிட்ட நதியில், குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தினங்களில் குளித்தால் நல்லது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான திருவிழா தான்

எந்த நதி, எந்த இடம், எந்த தினங்கள் ?

இந்தியாவில் நான்கு இடங்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

  1. ஹரித்வார்
  2. அலகாபாத் (பிரயாகை)
  3. திம்பிராக் நாசிக்
  4. உஜ்ஜயின்

ஒவ்வொரு இடத்திலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. வியாழன் சூரியனை சுற்றிவருவதன் அடிப்படையில் இது நடப்பதால், சில நேரங்களில் 11 ஆண்டுகள் கழித்தும் வரலாம்

ஹரித்வார் கும்பமேளா

குரு (வியாழன் / ஜூபிட்டர்) கும்பத்திலும், சூரியன் மேஷத்திலும் இருக்கும் போது கங்கைக்கரையில் அமைந்த ஹரித்வாரில்  கொண்டாடப்படுகிறது. மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வரும் சிவராத்திரி, சித்திரை அமாவாசை, மேஷ சங்கிராந்தி ஆகியவை இந்த விழாவின் முக்கிய நாட்கள். இந்த மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களும் திருவிழா நடக்கும்.

அலகாபாத் (பிரயாகை) கும்பமேளா

குரு (வியாழன் / ஜூபிட்டர்) மேஷத்திலோ, ரிஷபத்திலோ இருக்கும் போதும், சூரியனும் சந்திரனும் மகரத்திலும் இருக்கும் போது கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் சங்கமிக்கும் அலகாபாத்தில் (பிரயாகை) கொண்டாடப்படுகிறது. ஜனவரி – பிப்ரவரி மாதங்களில்  வரும் மகர சங்கிராந்தி, அதை தொடர்ந்த அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை இந்த விழாவின் முக்கிய நாட்கள். இந்த மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களும் திருவிழா நடக்கும்.

திம்பிராக் நாசிக் கும்பமேளா

குரு (வியாழன் / ஜூபிட்டர்) சிம்மத்திலும், சூரியனும் சந்திரனும் கடகத்தில் நுழையும் போது அல்லது கடத்தில் ஒரே பாகையில் இருக்கும் போது கோதாவரி நதிக்கரையில் அமைந்த திம்பிராக் நாசிகில் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் வரும் சிம்ம சங்கிராந்தி, பத்ரபத (ஆவனி) அமாவாசை, தேவோத்யான் (கார்த்திகை) ஏகாதசி  ஆகியவை இந்த விழாவின் முக்கிய நாட்கள். இந்த மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களும் திருவிழா நடக்கும்.

உஜ்ஜயின் கும்பமேளா

குரு (வியாழன் / ஜூபிட்டர்) சிம்மத்திலும், சூரியன் மேஷத்திலும் இருக்கும் போது சிப்ரா நதிக்கரையில் அமைந்த உஜ்ஜயினில் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மே மாதங்களில் வரும் சித்திரை பௌர்ணமி, சித்திரை அமாவாசை, வைகாசி பௌர்ணமி ஆகியவை இந்த விழாவின் முக்கிய நாட்கள். இந்த மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட நாட்களும் திருவிழா நடக்கும்.

சமீப காலங்களில் நடந்த கும்பமேளாக்கள் எவை ?

  • 1986, 1998, 2010 ஆகிய ஆண்டுகளில் ஹரித்வார் கும்பமேளா கொண்டாடப்பட்டது
  • 1989, 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் அலகாபாத் (பிரயாகை) கும்பமேளா கொண்டாடப்பட்டது
  • 1980, 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் திம்பிராக் நாசிக் கும்பமேளா கொண்டாடப்பட்டது
  • 1980, 1992, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் உஜ்ஜயின் கும்பமேளா கொண்டாடப்பட்டது

அர்த் கும்பமேளா என்றால் என்ன?

கும்ப மேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது. இந்த 12 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட 6ஆம் வருடம் அலகாபாத்திலும், ஹரித்வாரிலும் வருவது அர்த் கும்பமேளா. உதாரணமாக

  • 1986, 1998, 2010 ஆகிய ஆண்டுகளில் ஹரித்வார் கும்பமேளா கொண்டாடப்பட்டது. 1992, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் ஹரித்வாரில் அர்த் கும்பமேளா கொண்டாடப்பட்டது
  • 1989, 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் அலகாபாத் (பிரயாகை) கும்பமேளா கொண்டாடப்பட்டது. 1984, 1995, 2007, 2019 ஆகிய ஆண்டுகளில் அலகாபாத்தில் (பிரயாகை) அர்த் கும்பமேளா கொண்டாடப்பட்டது

மகா கும்பமேளா என்றால் என்ன ?

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது மகா கும்பமேளா.

கும்பமேளாவும் காலராவும் தொற்று நோய்களும்

காலரா குறித்து R.POLLITZER, M.D, S. SWAROOP, Ph. D. M.P.H., W. BURROWS, M. D ஆகியோர் எழுதி 1959ல் உலக சுகாதார நிலையம் பதிப்பித்த நூலில் (WORLD HEALTH ORGASIZATION MONOGRAPH SERIES No. 43) ஹரித்வாரிலும், அலகாபாத்திலும் கும்பமேளா நடைபெற்ற ஆண்டுகளை தொடர்ந்து ஐக்கிய மாகாணங்களிலும் அதை ஒற்றிய பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் காலராவினால் அதிக மரணங்கள் ஏற்பட்டதாக உள்ளன.

ஐக்கிய மாகாணங்கள், அதாவது United Provinces என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட பகுதிகள் பின்ன உத்திர பிரதேசமானது (வரலாற்று ஆர்வலர்களுக்காக ஒரு சிறிய விளம்பர இடைவேளை. இந்திய விடுதலைக்கு முன்னர் Agra Presidency, Bengal Presidency, Bombay Presidency, Madras Presidency, Presidency of Coromandel and Bengal Settlements,  Straits Settlements Presidency (at Penang), Western Presidency (Surat Presidency), Aden Province (associated, in Yemen, Arabia), Agra Province, Ajmer-Merwara, Andaman and Nicobar Islands, Assam Province, Baluchistan, Bengal Province, Berar Province, Bihar and Orissa Province, Bihar Province, (Upper) Burma, Central Provinces (இது இன்றைய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் பகுதி என்பதை கண்டுபிடித்தீர்களா), Central Provinces and Berar, Coorg Province, Delhi Province, Eastern Bengal and Assam, Lower Burma, Nagpur Province, North-West Frontier Province, North-Western Provinces, Orissa Province, Panth-Piploda Province, Punjab Province, Sind Province, United Provinces of Agra and Oudh, United Provinces of British India, United Provinces ஆகியவை இருந்தன)

1783ல் ஹரித்துவாரில் கும்ப மேளா நடந்தது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளில் 20000 பேர் காலராவினால் இறந்தார்கள். 1879ல் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்ததை தொடர்ந்து ஜக்கிய மாகாணங்களின் ஜனத்தொகையில் ஆயிரத்தில் ஒருவர் இறந்தார்கள். 1882ல் அலகாபாத்தில் கும்பமேளா நடந்ததை தொடர்ந்து ஐக்கிய மாகாணத்தில் ஆயிரத்தில் இருவர் காலராவினால் இறந்தார்கள். 1885ல் ஹரித்வாரில் நடந்த அர்த் கும்பமேளாவினால் ஆயிரத்திற்கு 1.75 பேரும், 1891ல் நடந்த கும்பமேளாவை தொடர்ந்து ஆயிரத்தில் நான்கு பேரும் காலராவினால் மரணமடையும் சோகம் நடந்தது. 1900 அலகாபாத்தின் அர்த கும்பமேளாவினால் ஆயிரத்திற்கு 1.8 பேர் மரணம் என்றல் நிலையில் 1906 அலகாபாத்தின் கும்பமேளாவின் மரண விகிதம் ஆயிரத்திற்கு 3 பேர். அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கும்ப மேளா நடக்கும் போது காலராவினால் நடக்கும் மரணங்கள் ஆயிரத்திற்கு 2 முதல் ஆயிரத்திற்கு 3 என்ற அளவிலேயே நடந்து வந்துள்ளன

இவ்வாறு கும்பமேளாவினால் நடக்கும் காலரா மரணங்களை தடுக்க அல்லது குறைந்த பட்சம் குறைக்க அன்றைய பிரிட்டிஷ் அரசு 1867 முதலே சில பல முயற்சிகளை செய்து வந்தது. இது குறித்து Encyclopedia of Plague and Pestilence: From Ancient Times to the Present (அமேசனில் வாங்க https://amzn.to/2QFJARr ) என்ற நூலில் ஜார்ஜ் சைல்ட் கோன் விரிவாக கூறியுள்ளார். முதலில் வரும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சித்தார்கள். 1885ல் ஒவ்வொரு விடுதியிலும் எத்தனை பேர் தங்கலாம் என்ற விதிமுறைகளை கொண்டுவந்தார்கள். தொடர்வண்டி சேவைகளை கட்டுப்படுத்தினார்கள். காலனிய பிரிட்டிஷ் அரசின் தங்குமிட சட்டம் (Lodging-House Act (Act 1 OF 1892)) என்பது கும்ப மேளா காலரா சாவுகளை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

கும்பமேளாவும் பிற தொற்று நோய்களும்

காலராவிற்கு மட்டுந்தான் கும்பமேளாவை பிடிக்கும் என்று நினைக்கவேண்டாம். ப்ளேகிற்கும் கும்பமேளாவை ரொம்ப பிடிக்குமாம். 1897 ஹரித்வாரில் நடந்த அர்த் கும்பமேளாவை தொடர்ந்து அங்கும் ப்ளேக் நோயும் பரவியது. அதன் பிறகு அனைத்து தங்குமிடங்களும், விடுதிகளும் மூடப்பட்டு மக்கள் ஊருக்கு வெளியில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர்

அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளும் நூல்களும்

அந்த காலக்கட்டத்தில் இந்திய மருத்துவ கெசட்,  லேன்சட் போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் கூட கும்பமேளாவினால் ஏற்படும் மரணங்கள் குறித்து பல கட்டுரைகள் வந்துள்ளன. உதாரணமாக

  • 1985 ஜூலை 27 இதழின் 201 முதல் 212 பக்களின் வந்துள்ள  H. Surg-Captain Herbert. Haridwar fair cholera outbreaks மற்றும்
  • 1908ஆம் ஆண்டு இதழின் 883 முதல் 884 பக்கங்களில் வந்துள்ள Birth, death, and disease statistics, with a discussion of a cholera epidemic associated with the 1906 Kumbh Mela at Allahabad கட்டுரைகளை கூறலாம்

ஒவ்வொரு முறை கும்பமேளா நடக்கும் போதும் அதை தொடர்ந்து தொற்று நோய் பரவல் என்பது நடந்து வந்தே உள்ளது என்பதை கீழ்க்கண்ட நூல்கள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

  • சின்மே டும்பே எழுதிய Age Of Pandemics (1817-1920): How they shaped India and the World (அமேசனில் வாங்க https://amzn.to/3tBSRIJ )
  • டேவிட் அர்நால்ட் எழுதிய Cholera and Colonialism in British India (இணையத்தில் வாசிக்க https://www.jstor.org/stable/650982 )
  • காமா மெக்லீன் எழுதிய Pilgrimage and Power: The Kumbh Mela in Allahabad, 1765-1954 (அமேசனில் வாங்க https://amzn.to/3enbIRq )

இது தவிர 1866ல் காண்ஸ்டண்டிநோபிலில் (தற்போதைய இஸ்தான்புல்) நடந்த  மூன்றாவது சர்வதேச சாக்கடை மற்றும் கழிவு நீக்க அறிவியல் மாநாட்டில் கும்பமேளாவினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்கள் (பார்க்க : https://apps.who.int/iris/bitstream/handle/10665/62873/14549_eng.pdf )

2021 ஹரித்வார் கும்பமேளா

2020ஆம் ஆண்டு கொரொனா பெருந்தொற்று ஏற்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு நடக்க வேண்டிய ஹரித்வார் கும்பமேளா குறித்து அரசு முடிவெடுக்கவில்லை. இந்நிலையில் அகில பாரதீய அகாரா பரிஷத் என்ற அமைப்பின் சாமியார்கள் உத்திரகாண்டின் முதல்வர் திரு திரிவேந்திர சிங் ரவாத் அவர்களை 2020 ஜூலை 22ஆம் தேதி சந்தித்து கும்பமேளா குறித்து அறிவிக்க வலியுறுத்தினார்கள். முதல்வரும் 2021ல் கும்பமேளா நடக்கும் என்று உறுதிகூறினார். மேலும் கொரோனா பெருந்தொற்று இருப்பதால் சில மாற்றங்களுடன் நடக்கும் என்றார். அகில பாரதீய அகாரா பரிஷத்தின் ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் அவர்களுக்கு தேவைப்பட்ட நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறினார். (பார்க்க : 2020 ஜூலை 22ஆம் தேதி இந்தியாடிவிநியூஸ் செய்தி https://www.indiatvnews.com/news/india/haridwar-kumbh-2021-to-be-held-as-per-schedule-says-uttarakhand-cm-bipin-rawat-636331 )

இரு மாதங்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்த போது, கும்பமேளாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் கூறினார் (பார்க்க https://www.business-standard.com/article/current-affairs/haridwar-kumbh-in-2021-to-be-numerically-restricted-trivendra-singh-rawat-120091800614_1.html )

2020 டிசம்பரில் அகில பாரதீய அகாரா பரிஷத்தின் தலைவர் மகாந்த் நரேந்திர கிரி பத்திரிகையாளர்களை சந்தித்து உத்திரகாண்ட் அரசின் மீதும், முதல்வர் மீது குற்றம் சுமத்தினார். அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், நய உதசின் அகாத கன்ஹாலில் எடுத்த முடிவின் படி, பரிஷத்தே மேளாவை நடத்தும் என்றும் பிரமாண்டமாக நடத்த கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கப்போவதாகவும் கூறினார் (பார்க்க http://www.businessworld.in/article/Will-organise-Maha-Kumbh-on-our-own-if-Uttarakhand-govt-doesn-t-cooperate-Akhada-parishad/26-12-2020-358327/ )

2021 மார்ச் மாதம் 11ஆம் தேதி சிவராத்திரி அன்று ஹரித்வார் கும்பமேளா துவங்கவுள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் 9ஆம் தேதி முதல்வர் திரிவேந்திர சிங் ரவாத் ராஜினாமா செய்தார்.

பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் “சார்தாம் யாத்திரை” குறித்து அவர் போதிய நடவடிக்கை எடுக்கதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது. இது தான் கூறப்பட்ட காரணம். (பார்க்க https://www.thehindu.com/news/national/other-states/uttarakhand-cm-trivendra-singh-rawat-resigns/article34027399.ece ) பள்ளிகள் கட்டவில்லை, மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்கவில்லை, சாலைகள் அமைக்கவில்லை, ரேஷன் கடை ஒழுங்காக செயல்படவில்லை என்று எல்லாம் அதிருப்தி இல்லை என்பதை நிலைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவரை தொடர்ந்து திரத் சிங் ரவாத் முதல்வரானார். எந்த வித கட்டுப்பாடும் இன்றி ஹரித்வார் கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறும் என்பது தான் புதிய முதல்வரின் முதல் அறிவிப்பு. (பார்க்க https://www.financialexpress.com/lifestyle/travel-tourism/uttarakhand-kumbh-mela-here-is-why-new-cm-tirath-singh-rawat-doesnt-want-any-restrictions-on-pilgrims/2216734/ ).

இதை தொடர்ந்து கொரோனா பரவும் நேரம் இப்படி எல்லாம் கட்டுப்பாடுகளை நீக்குவது சரியல்ல என்று பழைய முதல்வர் கூறினார் (பார்க்க : https://www.hindustantimes.com/india-news/uttarakhand-ex-cm-trivendra-rawat-flags-easing-of-covid-restrictions-for-kumbh-101615806301513.html ) ஆனால் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை

கொரொனா பெருந்தொற்று இல்லாத நேரத்திலேயே கும்பமேளா என்பது தொற்று பரவும் வாய்ப்புள்ள விழா என்பது வரலாறு கூறும் செய்தி. அப்படி இருக்கும் போது, கொரோனா பெருந்தொற்று நடக்கும் போது என்ன ஆகும் என்று புரிந்து கொள்வது கடினமல்லவே

கும்பமேளா கண்டிப்பாக நடக்க வேண்டுமா

Cases Increase from 21 March
Cases Increase from 21 March

1942ஆம் ஆண்டு உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் போது கும்பமேளா பெரு விழாவாக நடக்க வில்லை. அலகாபாத்தில் உள்ளவர்களில் சிலர் மட்டுமே நதியில் குளித்தார்கள். ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழக்கமாக மேளாவிற்கு ஒதுக்கப்படும் பணம் பிற மக்கள் நல பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது (ஆதாரம் : https://timesofindia.indiatimes.com/city/allahabad/british-scrapped-magh-mela-in-1942/articleshow/50575926.cms )

ஆனால் 2021 நடந்தது என்ன ? கூடுதல் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன (ஆதாரம் : https://www.financialexpress.com/infrastructure/railways/indian-railways-to-run-special-trains-for-haridwar-kumbh-mela-2021-see-train-list-with-halts-timings/2168775/ ) ஆக்சிஜனுக்கும், மருந்திற்கும் பணம் குறைக்கப்பட்டு விழாவிற்கு கூடுதல் பணம் ஒதுக்கப்பட்டது.

Cases Increase from 21 March
Cases Increase from 21 March

ஹரித்வார் கும்பமேளாவின் முதல் நாள் சிவராத்திரி நிகழ்வில் குளித்து விட்டு சொந்த ஊருக்கும் வந்த மக்களினால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சரியாக 21 மார்ச் அன்று தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எப்பொழுது கொரோனா பரவ ஆரம்பித்தது என்று பாருங்கள். இந்த படங்களை பாருங்கள். சில மாநிலங்களில் தேர்தல் உள்ளது. சில மாநிலங்களில் இல்லை. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில், சரியாக கும்பமேளாவின் பத்தாவது நாள் தொற்று அதிகரித்துள்ளதை காணலாம்