https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158415553214613
சொந்தபந்தங்கள் எதுவுமில்லாமல் தனித்துவிடப்பட்ட ஒரு முதியவர். ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு நாய்க்குட்டி துணைக்கு வந்து சேர்ந்தது.
முதியவர் அந்த நாய்க்குட்டியை பழக்க ஆரம்பித்தார்.
சிறுசிறு வேலைகளைச் செய்வது, வீட்டைப் பாதுகாப்பது கடைகளுக்குப் போய் வருவது என ஆரம்பித்து கடைசியில் அந்த நாய்க்குட்டி அவரோடு ரம்மி விளையாடும் அளவிற்கு தேர்ந்துவிட்டது.
அப்போது ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் முதியவர் அந்த நாய் குட்டியுடன் ரம்மி விளையாடுவதைப் பார்த்து அசந்து போனான். அந்த முதியவரிடம் வழிப்போக்கன் நாயைப் பலவாறு சிலாகித்து பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தான்.
“என் வாழ்நாளில் ரம்மி விளையாடும் ஒரு நாய்க்குட்டி நான் பார்த்ததே இல்லை. எத்தனை அருமையான நாய்க்குட்டி” என்று பாராட்டினார் வழிப்போக்கன்.
அந்த முதியவர் மிகுந்த எரிச்சலோடு சொன்னார்
“அந்த நாய்க்குட்டியை ரெம்பவும் புகழாதே.. அது அப்படி ஒன்றும் அறிவாளி அல்ல.. ஒவ்வொரு முறை ஜோக்கர் கிடைத்ததும் அது தனது வாலை ஆட்டி விடுகிறது. அது ஒரு புத்திசாலித்தனமில்லாத நாய்க்குட்டி” என்று சலித்துக் கொண்டார்.
அதற்கு அந்த வழிப்போக்கன் சொன்னான் “பெரியவரே உங்கள் தனிமையைத் தீர்க்க வந்த அந்த நாய் குட்டியின் மேல் இத்தனை சலிப்படைய தேவையில்லை. உண்மையிலே ரம்மி விளையாடுவதற்கு நீங்கள் ஆர்வமாய் இருந்தால் இனி விளையாடும்போது அந்த நாய்க்குட்டியின் வாலைப் பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
நீங்களும் அந்த முதியவரைப் போல எல்லோர் மீதும் சலிப்படைத்தவர்களாக எல்லோரையும் உங்கள் கொள்கைகளை நூறு விழுக்காடு பின்பற்ற வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்களாக இருக்காதீர்கள்.
அப்படி சலிப்படைவதால் அருமையான ஒரு ரம்மி விளையாட்டை இழந்து விடக்கூடும். அருமையான மனிதர்கள் பலரை இழந்து விடக் கூடும்.
(எங்கோ படித்த ஒரு கதை )
– சாந்தி நாராயணன்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158416195384613
நடிகர் விவேக் தனது படங்களில் பேசிய முற்போக்கு கருத்துகளை பார்த்து அவரை ’சின்ன கலைவாணர்’ என கலைஞர் அழைத்தார். இன்று விவேக் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்ட திமுக, திக அறிக்கைகள் ‘சின்ன கலைவாணர்’ என விளித்ததை அதெப்படி அப்படி அழைக்கலாம், அது Transferred Epithet என மரு.ஷாலினி எப்போதும் போல பாய்ந்து பிரண்டிக் கொண்டிருக்கிறார்.
அவ்வவ்போது பதிவையோ கமெண்டையோ ஆங்கிலத்திற்கு மாற்றி “நான் எலைட் தெரியுமா” என சீன் போடும் ஷாலினியின் ஆங்கிலமும் அறிவுநாணயமும் இங்கே பர்னிச்சர் உடைக்கபடுகிறது.
•••••••••••••••••••
Transferred Epithet. அப்படின்னா என்ன ?
Where the adverb or adjective is transferred from one noun to the other.
அதாவது ஒரு பெயர்ச் சொல்லினை விளக்கும் வார்த்தையை வேறு ஒன்றோடு சொல்வது.
Sick room – room was not sick, அந்த ரூம்ல இருக்கறவர் தான் sick. அந்த மாதிரி transferred epithet means transferring a modifier to change the structure of a sentence, but not its meaning.
இப்ப சின்ன கலைவாணர்க்கு வருவோம்.
இது Hypallage ஆ?
இதுல nounயே ஒன்னுல இருந்து இன்னொன்றா மாற்றி இருக்கு. இதுல quality describe ஆகல, நபரே describe ஆகின்றார். இது எப்படி Transferred Epithet ஆகும்னு தெரில.
சரி அப்படியே வச்சுப்போம்
சசிகலாவை சின்னம்மான்னு சொல்வது transferred epithet, அப்படி சொல்லக் கூடாதுன்னு சொல்லத் தயாரா ?
-Devi Somasundaram
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158416315364613
போன வாரம் :
“திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் சாதி ஆணவ படுகொலைனு குறிப்பிடல, இதெல்லாம் அறிக்கையா, இவ்வளவு லேட்டாவா அறிக்கை கொடுக்குறது”
உண்மை : திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில் சோகனூர் கொலை அரசியல் தகராறு என தெளிவாக தலைப்பிடபட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் புரட்சி பாரதம் கட்சியினர், கொன்றவர்கள் அதிமுக கட்சியினர். இரண்டும் கூட்டணி கட்சி.
இந்தவாரம் :
“திக தலைவர் கி.வீரமணி அறிக்கையில் விவேக் சாதியை பற்றி சொல்லிருக்காரு, இதெல்லாம் முற்போக்கா”
உண்மை : நடிகர் விவேக் மரணத்திற்கு திக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் விவேக் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து தன் உழைப்பால் முன்னுக்கு வந்ததை சொல்லியுள்ளாரே தவிர சாதியை எங்குமே குறிப்பிடவில்லை. பிறப்படுத்தப்பட்டோர் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை.
பின்ன ஏன் நீல சங்கிகள் வாராவாரம் ஏதாவது ஒரு பொய்யை சொல்லியோ, உண்மையை திரித்தோ, திராவிட தலைவர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் … அவங்களுக்கும் பசிக்கும்ல
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158417347674613
கொடியன்குளம் சம்பவம் 31 Aug 1995 அன்று நடக்கிறது 18பேர் கொல்லபட்டு ஒரு கிராமமே சூரையாடப்பட்டு மக்கள் தங்கள் உடைமைகளை தொலைத்து நின்று கொண்டிருந்த வேளையில் ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
07 Sep 1995 அதாவது சம்பவம் நடந்து வெறும் 7நாட்களில் இந்த இந்தியாவே இதுவரை கண்டிராத அளவுக்கு தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை 75000sqft அளவில் ஒரு பிரமாண்டமான செட், விருந்தினர்கள் தங்குவதற்கு 1000 ரூம்கள் நடசத்திர ஹோட்டலில், 2லட்சம் தாம்பூலம் தட்டுகளுடன் நடத்தினார்.
ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை. நாம் நினைப்பதை விட மோசமானவர் JJ.
– Seshathiri Dhanasekaran
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158417429494613
கீழ்வெண்மணியில் பட்டியலினத்து பாட்டாளிகளை கொன்ற கோபாலகிருஷ்ணனை ஆதரித்தவர் பெரியார் என்று குரைக்கிறது ஒன்று.
சுதந்திர இந்தியாவில் காந்தியார் படுகொலை/ காமராசர் மீது கொலை முயற்சி சம்பவங்களுக்கு அடுத்து நடந்த பச்சைப்படுகொலை என்று அறிக்கை விட்டவர் பெரியார்.
அந்தப் பண்ணையாரை அன்றைய தினமே கைது செய்தவர் அன்றைய முதல்வர் அண்ணா.
தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி பேசி இருக்கிறார். எல்லா நடவடிக்கைகளையும் பி.ஆரிடம் கேட்டுத்தான் அண்ணா செய்தார்.
வழக்கில் தீர்ப்புவருவதற்கு முன்னதாக “தீ வைத்துக் கொளுத்திய கொடும்பாவி” என்று சொன்னவர் அன்றைய முதல்வர் கலைஞர்.
பெரியாரிடம் விளக்கம் சொல்ல அந்த பண்ணையார் வந்த போது அவர் சந்திக்க மறுத்ததாக தி.க.விலிருந்து வெளியேறிய மனிதர்களே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்தார்கள்.
அனைத்துக்கும் மேலாக கோபாலகிருஷ்ணனை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டதில் திராவிடர் கழகத்தினரும் உண்டு.
இந்த வரலாறுகளை ஒழுங்காகச் சொல்லித் தராததன் விளைவுதான் எச்சைகள் பாடம் எடுக்கிறார்கள்!
நன்றி :- திரு.ப.திருமாவேலன்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158418193649613
“விவேக் அக்காகிட்ட தான் வைத்தியம் பார்த்தோம். நல்லவங்க. பார்த்ததும் பார்ப்பனர்னு தெரியும்” சற்று நேரத்துக்கு முன்னர் ஒருவர் சொன்னது. “என்னது பார்ப்பனரா?” என எதிர் கேள்வி கேட்டதும் “இல்லையா?” என ஆச்சரியமாக கேட்டார்.
அவர் ஆச்சரியமாக கேட்டது ஒன்றும் வியப்பல்ல, ஏன்னெனில் திரைத்துறையில் பல பத்தாண்டுகளாக இருக்கும் ரஜினி “விவேக் இன்டெலிஜென்ட்டாக பேசுவதை கேட்டு பார்ப்பனர்னு நினச்சுட்டேன்” என மேடையில் சொன்னார்.
நாகேஷ், சோ, விசு, SV சேகர், YG மகேந்திரன், கிரேசி மோகன், டெல்லி கணேஷ் என அந்த வரிசையில் விவேக்கை அவாள் சேர்க்க முயல்வதன் நோக்கம் “எங்கவா ஒருத்தர் எவ்வளவு முற்போக்கா பேசி நடிச்சிருக்கா பாருங்கோ” என பீற்றத் தான்.
இப்படி செய்வார்களா என வியப்போர்க்கு கர்நாடக சங்கீத பேரரசி என கொண்டாடப்படும் MS சுப்புலட்சுமி பார்ப்பனர் அல்ல என்பது தெரியுமா ?
ஏன் வள்ளுவரை மயிலாப்பூரில் பிறந்தவர் என தொடர்ந்து கமலஹாசன் சொல்லுகிறார் என்ற நுண்ணரசியல் புரிந்தால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விவேக்கின் இரங்கல் அறிக்கையில் “பிற்படுத்தபட்ட வகுப்பில் பிறந்தவர்” என்பதை தெளிவாக குறிப்பிட்டதன் நோக்கம் புரியும்.
தாம் களவாட முயன்றதை ஆசிரியர் கி.வீரமணி கெடுத்து விட்டாரே என்ற ஆற்றாமையில் இருந்த பார்ப்பன கூட்டம் தங்களின் விசுவாசமான நீல சங்கிகளை ஏவி “ஐயோ திராவிடத்தின் சாதி ஒழிப்பை பாருங்கள்” என பகடி செய்ய முயல்கிறது.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158418377474613
நடிகர் விவேக்கிற்கான இரங்கல் செய்தியில் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடுவது அவசியமா ?
அண்ணல் அம்பேத்காரை பார்ப்பனர் என காந்தி எண்ணிக் கொண்டது போல மக்கள் நடிகர் விவேக்கை பார்ப்பனர் என நினைத்துக் கொள்ளக் கூடாது.
பீமாராவ் அம்பேத்கர் என்ற அண்ணலின் பெயரில் அம்பேத்கர் என்பது அவரது பார்ப்பன பள்ளி ஆசிரியரின் பெயர் என ஒரு அண்டப் புளுகை இன்று வரை பரப்பி வருகிறார்கள். அதாவது அண்ணலின் அறிவும் ஆற்றலும் அவருக்கு கொடுத்ததே அவரது பார்ப்பன ஆசிரியர் தான் என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
படித்தவர், துறைசார் புகழ்பெற்றோர் பார்ப்பனர்கள் தான், பார்ப்பன உதவியால் தான் நிகழ்ந்தது என்ற பொது புத்தியை கட்டமைக்கும் கயமையை முறியடிக்க திராவிடர் கழகம் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் “நடிகர் விவேக் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்” என குறிப்பிடுவது அவசியமே.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158419473024613
பார்ப்பனியம் துப்பும் எச்சிலை பொறுக்கிக் கொண்டு வந்து திடல் மீது வீசுபவர்களை நீல சங்கி என்று தான் அழைக்க முடியும். மனசு புண்பட்டா, காஞ்சி பெரியவாகிட்ட போய் புலம்புங்கோ!
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158419561259613
ஆர்எஸ்எஸ்காரர் அருண் ஷோரி எழுதிய “Worshipping False Gods”, அதாவது அம்பேத்கர் ஒரு பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று எழுதினார்,
அதற்கு மறுப்பு தெரிவித்து நூலை வெளியிட்டது திராவிடர் கழகம்
ம.வெங்கடேசன் என்ற பிஜேபி சங்கி எழுதிய “இந்துத்துவ அம்பேத்கர்” என்ற நூலை எதிர்த்து மறுப்பு தெரிவித்து பல நூலை வெளியிட்டது திராவிட இயக்கமும், இடதுசாரிகளும்
“அம்பேத்கரும் அவதூறுகளும்: ஜெயமோகனுக்கு மறுப்பு” என்று பெரியார்/அம்பேத்கர் தொண்டர் பா.பிரபாகரன் எழுதியது
“அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்” என்று நூலை வெளியிட்ட ம.மதிவண்ணன்
“அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்” எனும் நூல் மருத்துவர் ஜெயராமன்
இப்படியாக பல நூல்களை ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வரலாற்று திரிபுகளை அதன் பிரச்சரத்திற்கு எதிராக அறிவுசார் தளத்தில் வெளியிட்டு சங்கிகளின் மூக்கை உடைத்த பேராசிரியர்கள் திராவிட இயக்கத்திலும், தலித் முரசு, இடதுசாரி இயக்கத்திலும் இருந்த வெளிட்டவர்கள் இருக்கிறார்கள்
எங்கே, திராவிட கழகத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் இந்த தலித்திய தூய்மைவாதிகள் ஒரு முறையாவது இந்துத்துவத்தின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக எத்தனை மூர்க்கமாக வாயை திறந்து இருக்கிறார்கள் ..?
#பகிர்வு
Via Saravanan M
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158419776349613
“திடல்ல இருக்கிறதெல்லாம் செட்டி, ரெட்டி, நாயுடு தான்!
திராவிடர் கழகத்துல அந்தக் குழு, இந்தக் குழுன்னு இருக்கும்ல, அவங்க கல்லூரிகள்ல பொறுப்புகள்ல… முக்கிய இடத்துல பொறுப்பாளரா போடுவாங்களா?”
ஆன்சர்: ஏதோ ஒரு ரிசர்ச் பேப்பர்ல இருந்து தான் கண்டுபிடிச்சிருப்பாங்க… சும்மாவா சொல்வாங்க… அது எந்த ரிசர்ச் பேப்பர்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.. இல்லைன்னா நீங்களே கம்மியூனிட்டி சர்டிபிகேட் கண்டுபிடிச்சு ஒரு ரிசர்ச் பேப்பர் போடலாமே!
ஏன்னா, எங்களுக்கு யார் என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாது, தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, அதைப் பற்றிய நினைப்போ கூட இருந்ததில்லை. இங்கே இருப்பவர்கள் பார்ப்பனரல்லாதார். அது ஒன்று தான் கிரைட்டீரியா. மற்றபடி ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்கள் அல்லது ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகள் தான் நிறைய இருக்காங்க – தலைமை முதல் தோழர்கள் வரை!
அப்படின்னா அந்த ரெட்டி, செட்டி, நாயுடு..? லேசா கொஞ்சம் தமிழ் தேசிய ஃப்ளேவர், ச்சும்மா சப்போர்ட்டுக்கு!
அப்புறம், நிகழ்வில் திராவிடர் கழகம் பற்றிய அவதூறை ஆமோதித்த ஓரிருவரும் அந்த ஆராய்ச்சியைச் செய்து ரிப்போர்ட் தரும்படியும் கேட்டுக் கொள்கிறோம். (பி.கு: ’ச்சை’ மட்டும் தாங்க மோசம்… அதுகூட நீங்க சொல்லிட்டா சரிங்க. அந்தப் போடா, வாடா.. மத்ததெல்லாம் ஓக்கேங்க!)
பெரியார் திடலும், திராவிடர் கழகமும் இந்த சமூகத்தில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், பெற்றிருக்கும் மதிப்பு பற்றிய வயிற்றெரிச்சல் எங்களை இன்னும் உற்சாகமாகப் பணியாற்ற வைக்கும்.
சிலருக்கு ஏன் எரிகிறது? திராவிடர் கழகம், ஆசிரியர் கி.வீரமணி, பெரியார் திடல் என்றால் இந்துத்துவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கு எரிவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தப் பெயர்கள் ஏன் வேறு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான்.
பெரியார் மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகும், வளர்ச்சி கண்டு, அந்த அமைப்பு இன்னும் கிளைவிரித்துப் பரவுகிறதே… அதற்கு இந்த வீரமணி காரணமாக இருக்கிறாரே என்பதுதான்!
இதையெல்லாம் விட எங்களுக்கு வேறென்ன உரம்? நன்றி… நன்றி தோழர்களே!
– Prince Ennares Periyar
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158419921674613
“பெரியார் என்ன வீரமணி சொத்தா ?? அடுத்த தலைமுறைக்கு பெரியார் இடத்தில் வீரமணிதான் தெரிய வேண்டுமா ??”
– நீல சங்கி
ஓ! உங்க அக்கறை ஹைகோர்ட்ட பார்த்து அப்படியே பூரிச்சு போயிட்டோம்.
பெரியார் கொள்கையை எப்படி பாதுகாத்து வளர்ப்பதுனு திராவிட தலைவர்களுக்கு தெரியும். அண்ணலை காவிகளிடம் இருந்து காப்பாற்றுவதும் திடல் தான்.
பிளிறதை குறைங்கடா ப்ளூ எலிபாண்ட்ஸ்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158420050204613
இவனுக வருசம் ஒரு கட்சில இருந்து தாவி குதிச்சு வந்துட்டு திக/திமுக பற்றி நொட்டை சொல்லுவானுகளாம் … எல்லோரும் பார்த்துட்டு சும்மா இருக்கனுமாம் … “ஐரோப்பிய நடுநிலை லாபி பெடெரேஷன்” என பெயரை மாற்றிக் கொண்டு என்னத்தவேனா வாந்தி எடுக்கவும்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158420382209613
“பெரியாரை சொல்லலையே. பெரியார் திடலில் இருப்பவர்களை தானே சொன்னோம்”
– நீல சங்கி
ஐரோப்பா நடுநிலை லாபி பெடரேஷன்
இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே … ஓ! பங்குனி17 திருமுருகன் “திடலை கைப்பற்றுவோம்”னு ஓட்டுனாரே அதே வண்டியா … எத்தன பேருடா நாக்பூர்ல நக்கிட்டு வந்து நடுநிலை வேசம் போடுவீங்க
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421460684613
டெல்லி பார்ப்பனீய கும்பலால் 2ஜி என்னும் புனையப்பட்ட வழக்கில், “தலித்+ திமுக” என்கிற ஒரே காரணத்தினால் , ஆ.ராசா சிக்க வைக்கப்பட்டட் போது, இரண்டு தலைவர்கள் (கட்சிகள்/இயக்கங்கள்) அவருக்கு கடைசிவரை உறுதுணையாக இருந்தன.
1. கலைஞர் (திமுக)
2. ஆசிரியர் வீரமணி (திக)
அப்பறம், இன்னக்கி ஆ.ராசாவுக்கு அது கொடுக்கணும், அந்த பதவி கொடுக்கணும், திக என்ன செஞ்சுதுன்னு, திமுக என்ன பண்ணுச்சுனு நீலிகண்ணீர் வடிக்கும், நீல சங்கிகள் அனைவருக்கும், “நடராஜன் + சங்கரமடம்” போட்ட பொறையை சாப்பிட்டு கம்மென்று இருந்தன.
இன்னும் நிறைய மேட்டர் வெளியே வரும்..
– Don VS
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421541024613
“பா.ஜ.க. ஆட்சியில் பிராமணர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன” (???)- BSP தலைவர், தோழர் மாயாவதி அவர்கள் கண்டனம்.
BSP யின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் “சதீஷ் சந்த்ர மிஸ்ரா” – BSP யின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் “ரித்தேஷ் பாண்டே” – கடந்த 2017 தேர்தலில் BSP உ.பி.யில் பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுத்த தொகுதிகள் 52. கடந்த 2007 தேர்தலில் இருந்தே 50 க்கும் குறையாத தொகுதிகளைப் பார்ப்பனர்கள் பெற்றனர். 2022 தேர்தலுக்காக 70 க்கும் மேற்பட்ட ஊர்களில் “பிராமண சகோதரத்துவ, நட்புறவுக்” கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தோழர் கன்ஷிராம் அவர்களின் உழைப்பை பார்ப்பனர்கள் அறுவடை செய்து வருகிறார்கள். உ.பி.யைப் போல தமிழ்நாட்டில் நடக்கவில்லை.
பெரியாருக்குப் பிறகு, அண்ணா, கலைஞருக்குப் பிறகு, தளபதி ஸ்டாலின் காலத்திலும் கூட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. எந்தப் பார்ப்பனருக்கும் சீட் கொடுக்க வில்லை. காரணமானவர்கள் பலர். அதில் முக்கியமானவர் ஆசிரியர்.
பெரியாருக்குப் பிறகு சமூகத் தளத்தில் மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களில் அரசியல் தளத்திலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மான, அவமானம் பாராத உழைப்பு. இது முக்கியமான காரணம்.
ஸ்டாலின் காலம் மட்டுமல்ல; உதயநிதியும் இளைஞரணிப் பொறுப்பாளரான உடன் பெரியார் திடலுக்கு வந்து ஆசிரியரிடம் வாழ்த்துப் பெறுகிறார். பார்ப்பனர் களைப் “பார்ப்பனர்கள்” என்றே துணிவுடன் அழைக்கிறார். தோழர் சுபவீ அவர்களின் திராவிடப் பள்ளியில் தி.மு.க.இளைஞரணிக்குப் பயிற்சி அளிக்கிறார். இராயப் பேட்டை தி.வி.க அலுவலகத்திற்குச் செல்கிறார். ஆக அடுத்த தலைமுறையிலும் பார்ப்பனர் களுக்குச் சிக்கல்.
பெரியாருக்குப் பிறகு வீரமணி என்ன சாதித்தார்?….பார்ப்பனர்களை அடுத்த தலைமுறையிலும் தழைக்க விடமாட்டார்.
முடிந்தால் இதை உ.பி.யில் செய்து காட்டுங்கள். “பார்ப்பனரே இல்லாத BSP வேட்பாளர் பட்டியல்” முடியுமா?
– (BSP யின் பார்ப்பன ஆதிக்கம் குறித்த செய்தி link https://indianexpress.com/article/explained/explained-why-mayawati-is-wooing-the-brahmins-again-ahead-of-2022-assembly-elections-6550437/?fbclid=IwAR1Oh7Hh4MLRxqNwYDykv7tjCjgcRwkcrClyWVnvQZGaJyLBSVmYJ3Z475k )
நன்றி் AThi Asuran
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421620544613
பெரியார் வீதி இருக்கிறது அம்பேத்கார் வீதி எங்கே என்று கேட்கும் ரஞ்சித்கள்….
தனி தொகுதியில்கூட சாதியகட்சியே வெற்றி பெறவேண்டும் என்று கூறும் ரஞ்சித்கள் …
அண்ணா படம் பயன்படுத்துவதில்லையினு கேட்டால் அம்பேத்கார் படத்தை திமுக பயன்படுத்துகிறதா? என்று கேட்கும் விசிக்கள்
வரலாற்று திரிபுசெய்து திமுகமீது வஞ்சத்தை கொட்டும் மாரிசெல்வராஜ்கள் …
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து போராடி பலபட்டம் ஏன் வெளிநாட்டில் சென்று பட்டம்பெற்று சட்டத்தை இயற்றிய அம்பேத்கார் போற்றுதலுக்கு உரியவரே…..
தந்தை பெரியார் சொன்னதுபோல் வால்மீகியைவைத்து இராமயணத்தை எழுதிய ஆரியம் அண்ணல் அம்பேத்காரைவைத்து சட்டப்புத்தகத்தை எழுதபயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மை…
அண்ணல் எழுதிய சட்டத்தில் இடஒதுக்கீட்டிற்காக முதல் சட்டதிருத்தத்தை செய்தது தந்தைபெரியாரும் தமிழகமும்தான் …
அண்ணல் தான் எழுதிய சட்டப்புத்தகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை கொண்டுவரமுடியாமல் அமைச்சரவையிலிருந்து விலகினார்…
ஆனால் அதைசட்டமாக்கியது கலைஞரே….
இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை அகற்றமுடியாமல் தன் சமுதாய மக்களுடன் ஏற்றத்தாழ்வு இல்லாத பௌத்தமதத்திற்கு மாறினார் அண்ணல் அம்பேத்கார் …
தன்நண்பர் பெரியாரையும் மதம்மாற அண்ணல் அழைத்தபோது நான் சார்ந்த இந்துமதத்தில் உள்ள குறைகளை களையவேண்டும் வேற்றுமதத்தில் இருந்துகொண்டு பிறமதத்தை குறைகூறுவது மடத்தனம் என்று மறுத்தவர் பெரியார் ..
சமூகநீதி அனைவரும் அர்ச்சகராகவேண்டும் என்று போராடியவர் பெரியார் ..
அதைமட்டுமல்ல அவர் விரும்பிய சமத்துவபுரத்தையும் அமைத்தவர் கலைஞர் …
இந்து அறநிலையத்துறைக்கு பட்டியல் பிரிவினரை அமைச்சராக்க வழிவகுத்தவர் பெரியார்
இந்து அறங்காவல்குழுவில் பட்டியல் பிரிவினர் ஒருவரை கண்டிப்பாக நியமிக்கவேண்டும் என்று சட்டம்போட்டவர் கலைஞர்..
பட்டியல் பிரிவு சேர்ந்தவரை முதன்முதலில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தவர் கலைஞர் ..
அண்ணல் பெயரில் சொந்த மாநிலத்தில் சட்டகல்லூரி அமைக்க எதிர்ப்பு வந்தபோது அண்ணல் பெயரில் சட்டபல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்
காது வெடப்பா இருக்கு அவன் நம்சாதிகாரன் என்று சொல்லுவதுபோல் தன் சாதிகாரன்தான் தன் சமுதாயத்திற்கு குரல்கொடுப்பான் என்பது முட்டாள்தனம்
மாயாவதி ஆண்ட உபியிலும் மாஞ்சி ஆண்ட பீஹாரிலும் பட்டியல் பிரிவினரின் இன்றைய நிலை என்ன?
பட்டியல் பிரிவினருக்கு ஆ.ராசா தான் குரல் கொடுக்கவேண்டும என்றில்லை. பாலுகளும் சிவாக்களும் கனிமொழிகளும் மாறன்களும் செந்தில்களும் குரல் கொடுப்பார்கள் …
அண்ணலை போற்றுவோம் …அண்ணல் முகமூடி அணிந்து பெரியார் அண்ணா கலைஞரை எதிர்த்தால் எதிர்ப்போரை எதிர்ப்போம் ….
– Elengovan K Dev
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421684439613
“ஆசிரியர் கி.வீரமணி என்ன செஞ்சாரு?”
– நீல சங்கி
ஐரோப்பிய நடுநிலை லாபி பெடெரேஷன்
சனாதனத்தை எதிர்த்து நேரடி போர் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய நூல்களும், களத்தில் நடத்திய போராட்டங்களும் ஏராளம்.
இதெல்லாம் கண்டும் காணாமல் போய் சங்கர மடத்தில் சாஷ்டாங்கமா விழுந்து “பாலச்சந்தர் சாதிகளை கடந்த ஒரு பார்ப்பனர்” என புகழாரம் சூட்டுவார்கள் நீல சங்கிகள்.
PC : Gowtham Raj
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421789164613
பெரியார் திடல் நிர்வாகிகள் மீது பங்குனி17 உணர்வாளர்களுக்கும், சங்கர மடம் சம்பளத்தில் சவுண்டு விடும் நீல சங்கிகளுக்கும் ஏன் இத்தனை வெறுப்பு ?
ரெம்போ சிம்பிள், பெரியார் தன் சொத்துகளை திராவிடர் கழகத்திற்கு கொடுத்து மக்களுக்கு நற்பணியாற்ற சொன்னார். அதை ஆசிரியர் கி.வீரமணி சிறப்பாக செய்து வருகிறார். இவ்வளவு பெரிய பொருளாதார பலம் கொண்ட திராவிடர் கழகத்திற்கு அரசியல் பலத்தை திமுக கொடுத்து சனாதனத்தை எதிர்த்து சமரசம் இல்லாமல் சண்டை செய்வதை பார்ப்பனிய கூட்டத்தால் ஏதும் செய்ய முடியாமல் தங்களின் ஏவல் ஆட்களை அனுப்பி களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158421955354613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 1
பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கேட்ட அண்ணல் அம்பேத்கரை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்த பொழுது “காந்தி செத்த சாகட்டும், நீங்க உங்க கோரிக்கையை கை விட வேண்டாம்” என கூறியவர் தந்தை பெரியார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422032619613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 2
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை அரசியலமைப்பு சட்டத்தில் பெற்றுத் தந்ததை பார்ப்பனர்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நீக்கியதும், அதை எதிர்த்து போராடி நேருவை முதல் சட்டத்திருத்தம் கொண்டு வர வைத்து பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்தவர் தந்தை பெரியார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422084719613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 3
1937யில் அண்ணல் அம்பேத்கரின் Annihilation of Caste புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து பதிப்பித்தவர் தந்தை பெரியார். பெரியார் நடத்திய குடியரசு நாளேட்டில் அம்பேத்கரின் Annihilation of Caste தமிழாக்கம் தொடராக வந்தது.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422146589613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 4
“பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பற்றி நான் வலியுறுத்தியும், எவ்வித முயற்ச்சியும் செய்ய மறுக்கிறார்கள்” என பாராளுமன்றத்தில் தன் மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொழுது அண்ணல் அம்பேத்கர் கூறினார். பிற்படுத்தபட்ட மக்களுக்கு அண்ணல் வழங்க விரும்பிய இடஒதுக்கீட்டை வி.பி.சிங் மூலமாக பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422216644613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 5
அண்ணல் அம்பேத்கர் கொண்டு வர முயன்று பார்ப்பனர்களால் தடுக்கபட்ட ‘இந்து சட்ட மசோதாவில்’ பெண்களுக்கான சொத்துரிமையும் அடங்கும். பெண்களுக்கான சொத்துரிமையை தன் வாழ்நாள் முழுவதும் ஆதரித்து பேசியவர் பெரியார். அண்ணலும் பெரியாரும் பெண்களுக்கு கொடுக்க முயன்ற சொத்துரிமையை இந்தியாவில் முதன்முறையாக சட்டமாக்கியவர் கலைஞர்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422319639613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 6
இந்து மதத்தின் சாதி இழிவில் இருந்து விடுபட அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாற முடிவெடுத்த பொழுது “தனியாக மதம் மாறாதீர்கள், பத்து லட்சம் மக்களை ஒன்று திரட்டி கூட்டமாக மதம் மாறுங்கள்” என அண்ணலுக்கு யோசனை சொன்னவர் தந்தை பெரியார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422401594613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 7
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 18%மாக உயர்த்தி, பட்டியலின மக்களில் அருந்ததியர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதால் அருந்ததியர்களுக்கு 3% உள்ளோதுக்கீடு கொடுத்து, பழங்குடியின மக்களுக்கு தனியாக 1% இடஒதுக்கீடு கொடுத்து சமூகநீதியை பாதுகாத்தவர் கலைஞர்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422486069613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 8
இமானுவேல் சேகரன் சாதிய வன்மத்தால் படுகொலை செய்யப்பட்டதும் (11செப்1957) இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி (02நவம்பர்1957) கொடுத்த தந்தை பெரியார் “குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வர்ணாசிரமத்துக்கு துணை செய்யும் சரத்துகளை மாற்றவில்லையெனில் எரிப்போம்” என்றவர் சொன்னது போலவே திக தொண்டர் படையோடு சட்ட எரிப்பு போராட்டத்தை (26நவம்பர்1957) முன்னெடுத்தார்.
இதை திரித்து சங்கிகள் பரப்பிய “அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை பெரியார் எரித்தார்” என்ற பொய்யை தூக்கிக் கொண்டாடிய நீல சங்கிகள் “அரசியலமைப்பு சட்டத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்தால் அதை எரிக்கும் முதல் ஆள் நான் தான்” என அண்ணல் சொன்னதை லாவகமாக மறைத்துவிடுவார்கள்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158422632429613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 9
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இந்தியாவெங்கிலும் 50% இடஒதுக்கீடு மட்டுமே இருக்க, தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு இருக்கிறது. அந்த 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித கேடும் நிகழாதபடி அதை ஜனாதிபதியின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க தமிழ்நாடு அரசிற்கு துணை நின்றவர் ஆசிரியர் கி.வீரமணி
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423333604613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 10
பொது தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறச் செய்த வரலாறு திமுகவிற்கு உண்டு. திமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது விசிக தலைவர் திருமாவளவன் தேர்தலில் (2011தவிர) தோற்றதேயில்லை.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423402859613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 11
பட்டியலின மக்களை ஒடுக்கி வர்ணாசிரமத்தை நிலைநாட்ட அயராது உழைக்கும் பாஜகவோடு ஏன் புரட்சி பாரதம் கூட்டணி வைத்துள்ளது என பூவை ஜெகன்மூர்த்தியார் புகழ் பாடும் ரஞ்சித் இதுவரை விளக்கியதேயில்லை.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423476389613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 12
கன்ஷிராம் முன்னெடுத்த பகுஜன் ஒற்றுமை என்பது பழங்குடியின, பட்டியலின, பிற்ப்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை கைப்பற்றி மக்களை முன்னேற்றுவது. ஆனால் மாயாவதி பார்பனர்களோடு கூட்டு சேர்ந்து பாஜக ஆட்சியை பிடிக்க வழி செய்து கொடுத்தார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423549859613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 13
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதியாக அண்ணல் அம்பேத்கர் இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தார். அவர்கள் பட்டியலின அட்டவணையில் இருந்து வெளியேறினால் இடஒதுக்கீடு மற்றும் வன்கொடுமைக்கு எதிரான சட்ட பாதுகாப்பு கிடைக்காமல் போகும் என்பதை பற்றி மரு.கிருஷ்ணசாமியிடம் ஏன் வாதிடுவதில்லை.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423604914613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 14
1970களில் உயர் நீதிமன்றத்தின் முதல் பட்டியலின நீதிபதியாக திரு.வரதராஜன் அவர்களை நியமிக்க வழி செய்தவர் தமிழ்நாடு முதல்வர் கலைஞர். பிறகு 1980களில் திரு.வரதராஜன் உச்ச நீதிமன்றத்தின் முதல் பட்டியலின நீதிபதியானார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423683819613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 15
“எனக்கென யாரும் தலைவர்கள் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருக்க வேண்டுமென்றால் அது அம்பேத்கராக மட்டுமே இருக்க முடியும்” என சொன்னவர் தந்தை பெரியார்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423744159613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 16
உத்திரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 17சாதிகளை பட்டியல் வகுப்பிற்கு மாற்றி இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நீர்த்து போகச் செய்ய முயற்சித்த பாஜகவை எதிர்த்து மாயாவதி ஏன் உக்கிரமாக போராடவில்லை.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423814644613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 17
“தலித் அரசியல் பேசும் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்து வென்று, சட்டமன்றத்தில் தலித் குரலாக ஒலிக்க வேண்டும் என ரஞ்சித் கூறிய கருத்துப்படி நடந்தால் பட்டியலின மக்களை பொது சமூகத்தில் இருந்து பிரித்து விடும். அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்கள் பொது நீரோட்டத்தில் பங்கு கொள்வதை தான் முன்னெடுத்தார்” என கூறியவர் விசிக தலைவர் திருமாவளவன்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158423929474613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 18
அண்ணல் அம்பேத்கரின் Schedule Caste Federation வழியாக வந்த Republic Party of India கட்சியை மஹாராஷ்டிராவில் பல துண்டுகளாக சிதறடித்து அதில் ஒரு துண்டான RPI(A) தலைவர் ராமதாஸ் அத்வாலே பட்டியலின மக்களை வர்ணாசிரம கொள்கை கொண்டு ஒடுக்க நினைக்கும் பாஜகவோடு கூட்டணியில் உள்ளார்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158424004239613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 19
பெயரில் அம்பேத்கரை சேர்த்து அவரை கேடயமாக வைத்துக் கொண்டு கலைஞரை சாதியை சொல்லி திட்டும் சாதி வெறியர்கள்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158424101134613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 20
கொடியங்குளம் மீது சாதிய வன்மத்துடன் அரச பயங்கரவாதம் ஏவப்பட்ட பின்னர், மூன்று கிராமங்கள் மீனாட்சிபுரம் போல இஸ்லாத்தை தழுவ முடிவெடுத்ததை நயமாக பேசி தடுத்து, அவர்களை அண்ணல் அம்பேத்கர் வழிகாட்டியது போல பௌத்தத்தை ஏற்க வழியும் காட்டாமல் சாதிய சாக்கடையிலேயே வைத்திருப்போரின் நோக்கம் சுயலாப அரசியல் மட்டுமே.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158424188964613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 21
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரும் முன்னரே அதை எதிர்த்து, இன்று வரை அதை ஒழிக்க போராடுபவர் ஆசிரியர் கி.வீரமணி. நீட் தேர்வு அனைத்து குழந்தைகளுக்கும் எதிரான கேடு என்பதை முன்னிறுத்தி போராடாமல், அது பட்டியலின மக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என குறுகிய வட்டத்தில் சுருக்க முயன்ற ரஞ்சித் இதுவரை முன்னெடுத்த வீரியமான நீட் எதிர்ப்பு போராட்டம் ஏதுமில்லை. மரு.கிருஷ்ணசாமி நீட் தேர்வை ஆதரித்து பேசிய பேச்சுகள் பற்றியும் கேள்வி கேட்டதில்லை
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158424405439613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 22
மதம் மாறியும் சாதி இழிவு ஒழியாத சிக்கலில் உழலும் கிருத்துவ, இசுலாமிய மதத்தை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுத் தர என்னென்ன போராட்டங்கள் செய்தீர்கள்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425333954613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 23
அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் சமூகநீதி நாணயத்தின் இரு பக்கங்கள் என நாம் சொன்னால், அந்த நாணயத்தை சுண்டி விட்டு எந்தப் பக்கம் விழுகிறது, அந்தப் பக்கம் யார் என பிரித்தாளும் சூழ்ச்சியை விளையாடி அண்ணலையும் பெரியாரையும் Mutually Exclusiveவாக நிறுவ முயலும் கயமையை ஒரு கூட்டம் செய்கிறது. சுண்டி விடுவது காவி சங்கிகள், ஆள் பிரிப்பது நீல சங்கிகள்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425517114613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 24
“சாதி ஒழிப்பில் நம் கூட்டாளி அம்பேத்கர்” என சொன்னவர் அறிஞர் அண்ணா
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425597084613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 25
“பட்டியலின மக்களுக்கான வீடுகளை ஊருக்கு நடுவே அமைத்திட வேண்டும். ஒதுக்குப் புறமாக காலனி கட்டுவதை அவர்கள் ஏற்கக்கூடாது” என உரிமை முழக்கம் எழுப்பியவர் பெரியார். நாக்பூர் சங்கிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உதவ அண்ணலை கேடயடமாக வைத்துக் கொண்டு “சேரி வாழ் பெரியாரிஸ்ட், ஊர் தெரு பெரியாரிஸ்ட்” என பேசுவோர் நீல சங்கிகளே.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425660844613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 26
மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டக் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து சாதியவாதிகளும் மதவாதிகளும் 1989ஆம் ஆண்டு போராடினார்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைக் கல்லூரி (1972), சட்டக் கல்லூரி (1990) துவக்கியவர் கலைஞர். இந்தியாவிலேயே அண்ணல் அம்பேத்கர் பெயரில் முதன்முதலாக சட்டப் பல்கலைக்கழகத்தை (1997) உருவாக்கியவரும் கலைஞர் தான்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425733314613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 27
ஊர்-சேரி என்ற வாழ்விடத்தின் சாதிய பிரிவினையை நீக்கி மக்கள் அருகருகே வாழ்ந்தால் தான் சாதி ஒழியும் என சமத்துவபுரங்களை உருவாக்கியவர் கலைஞர். அனைவரையும் உள்ளடக்கிய சமதர்ம சமூகம் உருவாக சமத்துவபுர வீடுகளை அனைத்து சமூக மக்களுக்கு மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள், திருநர்களுக்கும் பங்கிட்டு கொடுத்தார் கலைஞர்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425827464613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 28
பட்டியலின மக்களையும் பெண்களையும் சனாதனத்தின் பெயரால் கோவிலுக்குள் அனுமதிக்காத இந்து மதத்தின் வர்ணாசிரம கோட்பாட்டை உடைக்க, அவர்கள் இந்து கோவில் அறங்காவலர் குழுவில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என சட்டம் இயற்றியவர் கலைஞர்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158425922454613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 29
தன் மீது மனிதமலம் வீசப்பட்ட பொழுது அதை துடைத்து விட்டு, “ஒருமுறை என் முகத்தில் மலம்பட்டதற்கே இத்தனை அருவெறுப்பா உள்ளதே, நாற்றம் குடலை புரட்டுதே, காலகாலமாய் மலத்தை அள்ளி சுத்தப்படுத்த ஒரு சமுகத்தை நிர்பந்திக்கும் இந்த சாதிய கட்டமைப்பை உடைத்து அந்த மக்களை எப்போது விடுவிக்க போகிறோம்” என பேசியவர் பெரியார்
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158426089529613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 30
சாதிய சமூகத்தில் பட்டியலின மக்களுக்கு அதிகார பங்கீடு கிடைப்பதை உறுதி செய்ய 1996யில் தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்ட பொழுது ஜனநாயகத்தையே கேலி செய்யும்படி பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தவிடாமல் சாதியவாதிகள் செய்த அட்டுழியங்களை தடுத்து 2006யில் தேர்தலை நடத்தி பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை உருவாக்கியது கலைஞரின் திமுக அரசு.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158426561099613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 31
பட்டியலினதவர்களும் பெண்களும் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக திமுகவின் நியமன பதவிகளில் மூன்றில் இரண்டு இடங்கள் அவர்களுக்கென இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158426672754613
அலுவலகத்தில் தொழில்நுட்ப வேலையில் இருந்த சிக்கலை இரு வாரமாக பல விதமாக முயற்சி செய்து இன்று வெற்றிகரமாக முடித்து குழுவினரின் பாராட்டை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பிய இந்த உபி ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த ‘ஜாதி ஒழிப்புப் புரட்சி’ என்ற பெரியாரின் உரைகளை கொண்ட தொகுப்பு நூலில் ஆறாம் பகுதி முழுக்க அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை பற்றி பெரியார் மக்களிடம் பேசியவற்றை வாசிக்க துவங்கினார்.
ஆகவே, ‘நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம்’ பதிவுகள் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158427705219613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 32
“பட்டியலின மக்களுக்கு சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வெற்றி பெற்றத்தோடு நின்று விடாமல் வேலைவாய்ப்பு கல்வியிலும் இடஒதுக்கீடு கேட்டு வழிவகை செய்தவர் அம்பேத்கர். அவர் யாரும் செய்யாத காரியத்தைச் செய்து வெற்றி பெற்றவர். அவர் புத்த மதத்தில் சேர்ந்ததிலிருந்தே அவரை எப்படியாவது ஒழித்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்கள். எப்படியோ சதி செய்து அவரைக் கொலை செய்து விட்டார்கள். அவர் சாவு இயற்கை அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்”
25.04.1963 அன்று மாயூரம் தாலுகா மணல்மேட்டுக்கு அடுத்த கொறுக்கையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை 04.05.1963)
https://www.facebook.com/Kabilan.Kamaraj/posts/10158427789114613
நீல சங்கிகள் பங்கருக்குள் பதுங்கும் தருணம் 33
“டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறந்த கல்விமான். இந்த இந்திய உபகண்டத்திலேயே சிறந்த ஆராய்ச்சிக்காரர். இவர் எழுதிய நூல்களுக்கு உலகெங்கிலும் செல்வாக்கு இருந்து வருகின்றது. எங்கள் இருவருக்கும் கொள்கையில் பெரும்பான்மையான கருத்து ஒற்றுமையுண்டு. நான் ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரம் இவைகள் ஒழிந்தாக வேண்டுமென்று கூறுகின்றேனோ அதே கருத்தைத்தான் அவரும் கொண்டு இருந்தார். அவரின் லாகூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டு தலைமை உரையினைப் பார்த்தால் தெரியும்”
25.04.1963 அன்று மாயூரம் தாலுகா மணல்மேட்டுக்கு அடுத்த கொறுக்கையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை 04.05.1963)