நீட் எனும் அநீதி

நீட் எனும் அநீதி மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் வரும் AIIMS ,ஜிப்மர் போன்ற கல்லூரிகளுக்கு நீட் கிடையாது ஆனால்…

Posted by Poovannan Ganapathy on Friday, May 4, 2018

மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் வரும் AIIMS ,ஜிப்மர் போன்ற கல்லூரிகளுக்கு நீட் கிடையாது ஆனால் மாநில அரசு ஒதுக்கி வந்த இடங்களுக்கு கட்டாய நீட், பெண் மருத்துவர்கள் உருவாக நூறாண்டுகள் முன் துவக்கப்பட்ட ,பல லட்சம் மக்களின் உயிர் காத்த சி எம் சி மருத்துவமனைக்கு கட்டாய நீட் என்பது நீட் ஆதரவாளர்களின் நோக்கத்தை தெளிவாக உணர்த்தும்.

சில நாட்களுக்கு முன்பு இந்து மத நம்பிக்கையில் ஊறிய பணக்கார கள்ளர் குடும்ப திருமண நிகழ்வு சமூக ஊடகங்களில் ஓடி கொண்டிருந்தது.திருமணம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து பண்பாடு,தமிழ் பண்பாடு ,மண்ணின் கலாச்சாரம் என்று பேசும் கூட்டம் அதனை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்திருக்கும்.இதே தான் தகுதி,தராதரம் என்று பேசும் நீட்.

பதிவு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை,எளிமையாக நண்பர்களோடு கோவிலில் திருமணம் செய்து கொள்வதை பெரும் குற்றமாக ,இழிவாக பார்க்கும் அதே கூட்டம் தான் மாநில அரசு நுழைவு தேர்வு இலலாமல் எளிமையாக பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவ மாணவிகளை சேர்ப்பதை பெரும் குற்றமாக மக்கள் முன் நிறுத்தியது .இதற்கு உடந்தையாக வழக்கமான இடஒதுக்கீடு எதிர்ப்பே தங்கள் ஒரே குறிக்கோளாக இருக்கும் மக்கள் ஆட்சியின் நான்கு தூண்களிலும் நிறைந்திருக்கும் கூட்டம் ஒத்து பாடியது.

சில ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் சில விசித்திர வழக்குகள்,தீர்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் வாரிசுகளுக்கு (இருவரில் ஒருவர் SC /ST பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்)தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருந்தது.இதில் OC -SC பிரிவுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு நீதியரசர் சம்பத் அதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.அனைத்து மருத்துவ இடங்களும் OC -SC பிரிவினருக்கே கிடைத்தது,இதனை எதிர்த்து மற்ற பிரிவுகளை சார்ந்த கலப்பின தம்பதிகளின் வாரிசுகள் வழக்கு தொடுத்தனர்.

இதற்கான பெஞ்ச் தீர்ப்பாக இந்த இட ஒதுக்கீடு தவறு என்று அழிக்கப்பட்டது.இதோடு சேர்த்து இலங்கை தமிழர்களுக்கு,மலேசிய தமிழர்களுக்கு,அந்தமானில் வாழும் தமிழர்களுக்கு தமிழுக்காக பாடுபட்ட ,சிறை சென்றவர்களின் வாரிசுகளுக்கு இருந்த அனைத்து இட ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன .அப்போது ஆட்சியில் அதிமுக இருந்தது.அதிகார வர்க்கம் இந்த வழக்கை மேல்முறையீடு கூட இல்லாமல் அப்படியே விட்டு விட்டது .மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருப்பார்கள் .இதெல்லாம் தெரிய வந்தாலும் சீமானிய மூடர்களுக்கும் முட்டாள்களுக்கும் மாநில அரசுக்கு இருந்த கொஞ்ச அதிகாரத்தை வைத்து கொண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு இங்கு மருத்துவம் படிக்க வாய்ப்புகள் தந்த திராவிடம் விளங்குமா என்ன ?

அது என்னடா தமிழ்நாடு மட்டும் கட்டாய இந்திக்கு ,மும்மொழி கொள்கைக்கு,நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு,இந்த கருணாநிதி ஒழிந்தால் தான் இந்திக்கு இருக்கும் எதிர்ப்பு ,தமிழ்,தமிழர் என்ற ?பிரிவினைவாதம் அடங்கும் என்று தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கூட்டம் பேசி கொண்டிருப்பதை வன்மத்தோடு காத்து கொண்டிருப்பதை விளக்கினாலும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இருக்கிறதா என்ன ?

இதற்கு சற்று முன்பு சென்றால் கலைஞர் கொண்டு வந்த பட்டதாரி இல்லாத குடும்பங்களின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்ட 5 ஊக்க மதிப்பெண் திட்டம்,அதன் பயன் தெரிய வரும்.,அதன் பயனாளிகளில் நானும் ஒருவன் .இதனை வெறி கொண்டு அழித்து விட்டு அதே நீதிமன்றங்கள் கிரீமி லேயர் என்ற பாட்டை பாடிய அவல நகைச்சுவையும் நடந்தது.இந்த திட்டத்தின் பலன் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கும் கிடைத்தது

இதனை போன்ற மாநில அரசின் இன்னொரு திட்டமான ரூரல் பள்ளிகள் கோட்டாவையும் இதே கூட்டம் தான் அடித்து ஆடி அழித்தது

contd

நீட் எனும் அநீதி நீட் தேர்வு பற்றி சில உண்மைகள்.மாநில அரசு கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை மத்திய அரசு நடத்தும் நுழைவு…

Posted by Poovannan Ganapathy on Thursday, May 3, 2018

ட் எனும் அநீதி

நீட் தேர்வு பற்றி சில உண்மைகள்.மாநில அரசு கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வு மூலம் எல்லா மாநில மாணவர்களை வைத்தும் மத்திய அரசு நிரப்பும் என்று 1986 ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.அதனை தமிழக அரசு ,ஆந்திர அரசு,ஜம்மு காஷ்மீர் அரசு எதிர்த்தன .ஆந்திர அரசு கல்லூரிகளில் டெலிங்கானா ,ராயலசீமா,கடலோர ஆந்திரா என்று மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகள் ஒதுக்கப்படும் முறை இருந்ததால் அங்கு மத்திய அரசு இடங்கள் ஒதுக்கும் சாத்தியம் இல்லை என்று மறுப்பு இன்று வரை தொடர்கிறது.

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமே என்று மாநில அரசு உறுதியாக இருந்தது.ஆனால் மாநில அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடைபெற்ற போது கவர்னர் பி சி அலெக்சாண்டர் மாநில அரசு இடங்களை மத்திய தொகுப்புக்கு தாரை வார்த்து கையெழுத்து போட்டு விட்டார்.

இந்த இடங்களுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் ஒரு நுழைவு தேர்வை நடத்தி வந்தது.கவர்னர் மத்திய அரசின் கூட்டு சதியின் காரணமான இந்த இழப்பை திருப்பி பெற இயலாத சூழலில் தான் மக்கள் ஆட்சியின் நான்கு தூண்களும் அன்றும் இன்றும் உள்ளன என்பது தனி கதை.அன்று துவக்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளில் தமிழக அரசு நாப்பது சதவீத இடங்களை குறைந்த கலவி கட்டணத்தில் (அதாவது வருடத்துக்கு 5000 ரூபாய் கட்டணம் ,நிர்வாகம் விற்கும் மீதி 60 இடங்களுக்கு 250000 ஆண்டு கட்டணம் என்று இருந்தது )இதில் இட ஒதுக்கீடும் உண்டு.

மத்திய அரசு ஒதுக்கும் இடங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் மக்கள் ஆட்சியின் நான்ங்கு தூண்களும் சில ஆண்டுகள் யாருக்காக அவை இயங்குகின்றனவோ அவர்களுக்கு முழு விசுவாசமாக நடந்து கொண்டன.பின்பு போராடி SC /ST இட ஒதுக்கீடு வந்தது.ஓபிசி இட ஒதுக்கீடும் பத்து ஆண்டுகளுக்கு முன் வந்தது.ஆனால் இன்றுவரை நான்கு தூண்களும் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீடு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு சதவீத இடங்கள் மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு கீழ் ஒதுக்கப்படும் நிலையை சாதித்திருக்கிறது

contd

நீட் எனும் அநீதி தனியார் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் இட ஒதுக்கீடோடு மாநில அரசு தன் மாநில மாணவ மாணவிகளுக்கு…

Posted by Poovannan Ganapathy on Thursday, May 3, 2018

நீட் எனும் அநீதி

தனியார் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் இட ஒதுக்கீடோடு மாநில அரசு தன் மாநில மாணவ மாணவிகளுக்கு ஒதுக்கும் சூழலை மக்கள் ஆட்சியின் நான்கு தூண்களால் தாங்க முடியுமா/அவர்கள் யாருக்காக ஐயூர்க்கிறார்களோ அவர்களுக்கு இதனால் ஏற்படும் பேரிழப்பை துடைக்க உறுதிபூண்டு தனியார் கலோரிகளில் மாநில அரசு இடங்களை ஒதுக்கும் முறையை கூட்டாக அழித்தார்கள்.

தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது எனும் அற்புதத்தை எளிதாக சாதித்தார்கள்.எந்த சமூக நீதி காவலர்களும் இதற்கு எதிராக சுண்டுவிரலை கூட அன்று முதல் இன்றுவரை அசைக்க முடியவில்லை.அரசு கல்லூரிகளிலேயே இட ஒதுக்கீட்டை அழகாக மறுக்கும் கூட்டத்திடம் கைய்யாறு நிலையில் இருக்கும் போது இதற்கு ஆசைப்படுவது நியாயமா என்பது உரைத்தாலும் சொல்வது கடமை ஆயிற்றே

ஒவ்வொரு கல்லூரியும் தன் விருப்பப்படி தனி பரீட்சை,மத்திய அரசு நடத்தும் கல்லூரிகள் தனி பரீட்சை என்று ஆடி கொண்டிருந்த சூழலை மாற்ற இதன் மூலம் ஒதுக்கப்பட்டு கொண்டிருந்த இடங்களுக்கு மறுபடியும் சொல்கிறேன் இதன் மூலம் ஒதுக்கப்பட்டு கொண்டிருந்த இடங்களுக்கு ஒரே ஒரு தேர்வு கொண்டு வருகிறோம் என்று தான் நீட் வந்தது..இதன் மூலம் மாநில அரசு ஒதுக்கும் இடங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது,.சி எம் சி போன்ற கல்லூரிகள் பின்பற்றி வரும் முறைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தான் சொல்லப்பட்டது.உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.அப்போது ஒரு இஸ்லாமியர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்ததால் சரியான தீர்ப்பை,முன் தரப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் சொன்ன போதும் அவர் மீது வன்மம் வாரி வாரி கொட்டப்பட்டது.

நீட் திமுக பங்கு பெற்றிருந்த மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.அவர்களும் குற்றவாளிகள் என்று திராவிடம் என்றால் வெறுக்கும் மூடர்கூட்டம் கொட்ட துவங்கி இருப்பதற்கான பதில் இது.கபில் ஸ்கைபால் ,பிரணாப் முகேர்ஜீ போன்ற இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் மக்கள் ஆட்சியின் நான்கு தூண்களிலும் நிறைந்திருக்கும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர் கூட்டத்தின் துணையோடு அடித்து ஆட விடாமல் தடுத்தது திமுகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் தான்.ஆனால் அடுத்து வந்த அதானி ஆட்சி இதனை முழு வன்மத்தோடு ,மற்ற தூண்களின் முழு நல்லாசியுடன் அனைத்து இடங்களுக்கும் என்று விரிவுபடுத்தியது.உச்சநீதிமன்ற தீர்ப்பை நீதிக்கு புறம்பான ஆனால் சாதிக்காக தீர்ப்பு வழங்கும் நீதி அரசர்கள் துணை கொண்டு தூக்கி போட்டது.

contd

நீட் -சில உண்மைகள் ,பல பொய்கள் நீட் பக்தர்கள் அடித்து விடும் பொய்களுக்கு எல்லையே இலலாமல் இருக்கிறது.அவர்களில் சிலர்…

Posted by Poovannan Ganapathy on Saturday, May 5, 2018

நீட் -சில உண்மைகள் ,பல பொய்கள்

நீட் பக்தர்கள் அடித்து விடும் பொய்களுக்கு எல்லையே இலலாமல் இருக்கிறது.அவர்களில் சிலர் இதனை உண்மையிலேயே நம்புவது ஆச்சரியம் தரவில்லை.பக்தனாக இருக்க அடிப்படை தேவையே முட்டாள்தனம் தானே .அவர்களின் பொய்களில் தலையாயது தனியார் மருத்துவ கல்லூரிகளை நீட் எனும் அற்புதம் நல்வழிப்படுத்திய கதை தான்.

நீட் தேர்வு கொண்டுவரப்படும் போது நானும் நீட் ஆதரவாளன் தான்.திருட்டுத்தனமாக ஆளுநர் அலெக்சாண்டர் மத்திய தொகுப்புக்கு தமிழக அரசு மருத்துவ கல்லூரி இடங்களை ஒதுக்குவதற்கு கையெழுத்து போட்ட பிறகு முப்பது ஆண்டுகளாக மத்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அதற்கான நுழைவு தேர்வு நடக்கிறது.மற்றும் மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளான ஜிப்மர் ,அய்ய்ம்ஸ் போன்ற கல்லூரிகளுக்கு ,மணிபால் போன்ற தனியார் கல்லூரிகளுக்கு தனி தனியாக இருந்த தேர்வுகள் மத்திய தொகுப்பில் சேர ,மற்றும் பல லட்சம் பணம் கொடுத்து சேர எண்ணமும் பணமும் கொண்ட மாணவமாணவிகளுக்கு பெரும் தடையாக இருந்தது ஒழியும் என்று நம்பினேன்.

மாநில அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் மீதிருந்த இடங்களை ஒதுக்கும் அதிகாரத்தை,அரசு இடங்கள் என்று குறைந்த கட்டணம் நியமித்து மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி மாணவர்களை சேர்த்து வந்ததை வெறியோடு அழித்த மக்கள் ஆட்சியின் நான்கு தூண்களும் இதிலும் வெறி கொண்டு ஆடும் என்று எண்ணவில்லை
.
திடீர் என்று இதனை பயன்படுத்தி ஆணாதிக்க சாதிவெறி தூண்கள் கடவுளாட்டம் ஆடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நுழைவு தேர்வே இல்லாமல் மாநில அரசு பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவிகளை தேர்ந்தெடுத்து வரும் முறையை வெறி கொண்டு அழிப்பதன் பின் உள்ள காரணங்கள் விளங்கும் போது ,நான்கு தூண்களின் சாதிவெறியும் ,நுட்பமான முறையில் சாதி ஆதிக்கத்தை தக்க வைக்க அது நடத்தும் தொடர் போரும் வியக்க வைக்கிறது.

பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது கல்வியில் இருந்து ஒதுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும் ,பெண்களுக்கும் எளிதாக இருந்ததை,அவர்கள் அதிக இடங்களை பிடிப்பதை ,ஆணுக்கு சமமாக இடங்களை பிடிப்பது,பொது பிரிவிலும் இட ஒதுக்கீடு பெரும் சாதிகள் குறிப்பிடத்தக்க இடங்கள் பிடிப்பது கண்டு கொதித்த நான்கு தூண்களும் இதனை தரைமட்டமாக்க பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண்களால் பயன் இல்லை எனும் சூழலை கட்டாய நீட் மூலம் உருவாக்கினர்.

கட்டாய நீட் செல்லாது என்று மிக தெளிவாக பல கான்ஸ்டிடூஷன் பெஞ்ச் தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெளிவாக தீர்ப்பளித்தும்,இதனை கட்டாயமாக்க நான்கு சாதிவெறி தூண்களும் செய்த சூழ்ச்சிகள்,முயற்சிகள் ,அதில் அடைந்திருக்கும் வெற்றி பிரமிக்க வைக்கிறது.

தமிழ்நாடு அரசு திட்டங்களை கிண்டல் செய்து விட்டு அதனையே ஈயடிச்சான் காப்பியாக மத்திய அரசில் மற்றும் இதர மாநிலங்களில் நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி தரும் கூட்டம் இதனை மட்டும் தெளிவாக ஒதுக்குவதன் பின்னே இருக்கும் சாதிவெறியும் ,வன்மமும் பயமுறுத்துகிறது.தமிழக அரசை போல பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பெரும்பான்மை இடங்களை மத்திய அரசும் ,மற்ற மாநில அரசுகளும் ஒதுக்க துவங்கினால் இந்த ஆண்டிலேயே மாணவிகள் மாணவர்களை விட அதிக இடங்களை பிடிக்கும் சூழல் வந்து விடும்.

IITJEE தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் சூழலில் ஏன் மாணவிகளுக்கு எட்டு சதவீத இடங்களே கிடைக்கிறது,மிக பெரும்பான்மையான கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இடங்கள் காலியாக இருக்கும் சூழல் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் இந்துமத ஆணாதிக்க சாதிவெறியர்களால் நிரம்பி இருக்கும் கூட்டம் ஏன் அனைத்து இடங்களுக்கும் நுழைவு தேர்வு அவசியம் என்று வெறியாட்டம் ஆடும் காரணம் விளங்கும்.

சென்ற ஆண்டு தமிழக அரசு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 122 இடங்களில் ஐந்து இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் கிடைத்ததால் மற்ற இடங்கள் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டன என்பதை நினைவு கூர்ந்தால் இந்த இந்துமதவெறியர்களின் குரூரம் விளங்கும்.

தனியார் கல்லூரிகளிலாவது மாற்றம் ஏற்பட்டதா என்று பார்த்தால் அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.தனியார் பள்ளி கட்டணங்களை சீரமைக்க ,குறைக்க எடுத்த முயற்சிகளே விழலுக்கு இறைத்த நீராக பயனற்று இருக்கும் சூழலில் பெரும் பணமுதலைகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் புழங்கும் பணம் குறைந்து விட்டது,மாணவர்கள் படிக்கும் கட்டணம் வெகுவாக குறைந்து விட்டது என்று பக்தர்கள் கொட்டும் பொய்கள் கடும் கோவத்தை தருகிறது.

மருத்துவன் என்பதால் அதுவும் பயங்கரமாக மீசை எல்லாம் வைத்து கொண்டு terror face உள்ள ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவன் என்பதால் ,காட்டை,வீட்டை விற்று மகன்,மகளை மருத்துவர் ஆக்க சுற்றும் கூட்டம் தனியார் கல்லூரிகளில் சேர்க்க துணைக்கு என்னை கூப்பிடுவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வு.,இந்த ஆண்டும் இதுவரை பத்திற்கு மேற்பட்டோர் என் உதவியை நாடி இருக்கிறார்கள்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏமாற்றி விடுமோ என்ற அச்சம் அன்றும் இன்றும் பணத்தை கொட்டி கொடுக்கும் பெற்றோருக்கு உண்டு.அன்று பிளஸ் டூ பாஸ் போல இன்று நீட் பாஸ் என்பது மட்டுமே மாறியுள்ள ஒரு நடைமுறை.யாருக்கு விண்ணப்பம் தர வேண்டும் என்று நிர்வாகம் முடிவு செய்பவர்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும்.பள்ளி முதல் மருத்துவ கல்லூரிகள் வரை இதே நிலை தான்.ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வில் 107 மதிப்பெண் மேல் எடுத்திருக்க வேண்டும்.அவ்வளவு தான்.500 மதிப்பெண் எடுத்தவருக்கு இடம் கொடுக்காமல் 107 மதிப்பெண் எடுத்தவருக்கு இடம் கொடுக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.அதனை நிறைவேற்றி கொள்ள பல்வேறு நேர்வழிகளும் பல குறுக்குவழிகளும் அன்றும் உண்டு.இன்றும் உண்டு