தமிழ்நாட்டின் மெடிக்கல் பிஜி ( முதுகலை) படிப்புகளுக்கு கடந்த முப்பது வருடங்களாக நடைமுறையில் இருந்த கவுன்சிலிங் வழக்கம் பின்வருமாறு
ஒருவர் எம்பிபிஎஸ் படித்து முடித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சிறப்பு மதிப்பெண் ( இதை சீனியாரிட்டி மதிப்பெண்) என்பார்கள்
அவர் அரசு துறையில் வேலை பார்த்தாலும் சரி.. தனியாரில் வேலை பார்த்தாலும் சரி.. இந்த மதிப்பெண் அவருக்கு கிடைக்கும்..
அதிகபட்சம் பத்து மதிப்பெண்கள்..
அரசு மருத்துவத்துறையில் சேர்ந்தால் அது ஆரம்ப சுகாதார நிலையமோ அரசு கல்லூரியோ மருத்துவமனையா
அதில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு
இந்த சீனியாரிட்டி மதிப்பெண்ணுடன் சேர்த்து வருடத்திற்கு எக்ஸ்ட்ரா ஒரு மதிப்பெண் கிடைக்கும்.
ஆக, ஒரு மருத்துவர் சர்வீஸில் சேர்ந்தால் வருடத்திற்கு இரண்டு மதிப்பெண் ( ஒரு சர்வீஸ் மதிப்பெண் + ஒரு சீனியாரிட்டி மதிப்பெண்)
இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான்.
ராம்நாடு, திருவாரூர், நாகை போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும் மலைவாழ் பிரதேசங்களிலும் பணி புரியும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் எக்ஸ்ட்ரா இரண்டு சர்வீஸ் மதிப்பெண் கிடைக்கும். ஆக, இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று மதிப்பெண் ( இரண்டு சர்வீஸ் மார்க் + ஒரு சீனியாரிட்டி மார்க்)
இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான்.
தமிழ்நாடு மருத்துவ எண்ட்ரெண்ஸ் 90 மதிப்பெண்களுக்கு நடக்கும்
அதில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்ணோடு இந்த சீனியாரிட்டி + சர்வீஸ் மதிப்பெண் கூட்டப்பட்டு 100 க்கு ரிசல்ட் வெளியாகும் .
எம்பிபிஎஸ் முடித்து மூன்று வருடங்களான ஒருவர்
ஒருவர் 90 மதிப்பெண்களுக்கு 60 எடுக்கிறார் என்றால்
அவர் அரசு வேலையில் இல்லை என்றால் அந்த மூன்று வருடங்களுக்கு சீனியாரிட்டி மதிப்பெண் மூன்று மார்க் சேர்த்து 100 க்கு 63 வாங்குவார்
இதே அவர் அரசு வேலையில் இருந்தால்
மூன்று வருடங்களுக்கு மூன்று சர்வீஸ் மார்க் + மூன்று சீனியாரிட்டி மார்க் சேர்த்து , 66 வாங்குவார்
இதே அவர் ராம்நாடு, திருவாரூர், நாகை மற்றும் மலை வாழ் பிரதேசங்களில் வேலை செய்திருந்தால், மூன்று வருடங்களுக்கு ஆறு சர்வீஸ் மார்க் + மூன்று சீனியாரிட்டி மார்க் என 69 வாங்குவார்..
கவுன்சிலிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் 69 சதவிகித விகிதாச்சார முறைப்படி நடக்கும்.
யாரும் இந்த முறையை எதிர்த்து வழக்கு போட்டு நிறுத்தவில்லை.
அருமையான ஒரு முறை.
சர்வீஸில் இல்லாதவர்களுக்கும் சரி
சர்வீஸில் இருப்பவர்களுக்கும் சரி
கடினமான சூழலில் வேலை பார்ப்பவர்களுக்கும் சரி நீதி செய்த முறை இது..
இந்த முறையினால் தான் தமிழகம் தற்போது சுகாதாரத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
சர்வீஸ் மூலம் பிஜி படித்தவர்கள் தாங்கள் பணிக்காலம் முடியும் வரை அரசுப்பணியில் இருப்பர்.
இதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை சுகாதாரமும் பேணப்பட்டு வந்தது.
இந்த சமயத்தில் தான்
2016 இல் முதுகலை நீட் வந்தது
இன்சண்டிவ் என்ற குளறுபடியான எம்சிஐ இன் உதவாக்கரை திட்டத்தால் பல்வேறு வழக்குகளும் அநீதிகளும்
தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன
சென்ற முறை சர்வீஸில் இல்லாத மக்களுக்கும் , அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது
இந்த முறை இன்னும் அதிக பேருக்கு அநீதி இழைக்கப்பட இருக்கிறது
இதன் மூலம் மத்திய அரசும் எம்சிஐயும் சாதிக்க போவது எதை??
ஒரு முன்னோடி மாநிலத்தின் சுகாதார துறையை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டாம். அதை கொடுக்காமலாவது இருந்திருக்கலாம்
இப்போது அனைத்தும் குட்டிசுவராகி விட்டது..
இனி தமிழகத்தின் எதிர்காலம் தனியார் மயமாவதை தடுப்பது மிக மிக கடினம்
அனைவரும் தங்களுக்கான ஹெல்த் இன்சுரண்சை எடுத்து வைத்துக்கொள்ளவும்
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
இப்பதிவை தலைவர்களுக்கு கொண்டு சேர்க்கணும். நான் என் கட்சித் தலைமைக்கு சேர்த்திருக்கணும். மேடையேற வேண்டிய பிரச்சினை