அவர்கள் கல்வியில் இருந்து துவங்குகிறார்கள்

தமிழக பல்கலைக்கழகங்களில் இனி வேதோபதேசம் ஆறு சாமங்களில் நடத்தப்படும். மனுதர்மம் காக்கப்படும். இது போன்ற செய்திகள்…

Posted by Rasigan NaaGo on Thursday, April 5, 2018

தமிழக பல்கலைக்கழகங்களில் இனி வேதோபதேசம் ஆறு சாமங்களில் நடத்தப்படும். மனுதர்மம் காக்கப்படும். இது போன்ற செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இசைப்பல்கலைக்கழகம் – #பிரமிளா_குருமூர்த்தி,
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் – #தம்மா_சூர்ய_நாராயண_சாஸ்திரி,
அண்ணா பல்கலைக்கழகம் – #எம்_கே_சூரப்பா.

மூவரின் பின்னணியும் இந்துத்வா என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களை நியமிக்க என்ன காரணம். நமது தமிழகத்தின் ஆளுனருக்கு, அனைவரும் நன்கு அறிந்த அண்ணன் #புஷ்பவனம்_குப்புசாமி யோ அல்லது #நெல்லையரசு வையோ கண்ணுக்கு தெரியவில்லையா என்ன..??

அனைவரையும் வேறு திசையில் திருப்பி விட்டு, இதை அழகாக கையாள்கிறார் நம்ம சங்கி #பன்வாரிலால்_புரோகித் அவர்கள்.

இன்னுமா புரியவில்லை., அவர்கள் மீண்டும் கல்வியிலிருந்து துவங்குகிறார்கள் என்று. எதிர்க்க வேண்டிய மாநில அரசு வாய் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து கேள்வி கேட்டாலும், நம் நடுநிலை நக்கிகள் உள்ளே புகுந்து, விவாதிக்க வேண்டியதை விட்டுவிட்டு “அவர் அந்த வாக்கியத்தில் “க்” விட்டுட்டாரு யா” என்று அதை ட்ரெண்டு ஆக்குகிறார்கள்..

விவாதங்கள் வரவேற்கத்தக்கது. நையாண்டி செய்து அதை விட்டுவிட்டால் பரவாயில்லை. ஆனால் அதையே ட்ரெண்டு செய்து மற்ற விடயங்களின் மீதான விவாதங்களை மறக்கச்செய்வது எந்த விதத்திலும் ஆரோக்கியம் அல்ல. இது கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.

நடுநிலை போராளிகளே.., தமிழகத்தின் பிராந்திய கட்சிகள் மீதான நையாண்டிகள் உங்களை எங்கு கொண்டு சேர்க்கும் என்பதை உணருவது எப்போதோ ?? அதுவரை கல்வி மட்டுமல்ல, அணைத்து துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மொத்தத்தில்..,

பல்கலைக்கழகங்கள் பஜனை மடமாக ஆகாமல் இருந்தால் சரி..

#வாழ்க_தமிழகம்

#நாகோ

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பதிவில் ஒரு வரி எழுதி இருந்தேன். "அவர்கள் கல்வியில் இருந்து…

Posted by Rasigan NaaGo on Thursday, April 19, 2018

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பதிவில் ஒரு வரி எழுதி இருந்தேன்.

“அவர்கள் கல்வியில் இருந்து துவங்குகிறார்கள்” என்று.

அதன் நீட்சிதான் #நிர்மலா_தேவி யின் அலைபேசி உரையாடல். எப்படி என யோசிக்க தோன்றுகிறதா ??

நம் நாட்டில் பல இடங்களில் #பெண்_கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், பல பெண்கள் மேற்கல்வி, வேலைவாய்ப்பு என சாதித்தது தமிழகத்தில் அதிகம். செய்தித்தாள்களில் பெயர் வந்தால் மட்டுமே சாதனை அல்ல. பணிக்கு செல்லும் தோழிகள் ஒவ்வொருவரும் சாதனையாளர்களே.

இப்படி இருக்கும் தமிழகத்தில் அவர்களின் முதல் மறைமுக தாக்குதல் கல்விதான். அவர்கள் பெண்கல்விக்கு மறைமுக எச்சரிக்கை விடுகின்றனர். இது மிக நுண்ணிய அரசியல் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது.

இந்த ஒரு ஆடியோ வினால் யாரும் படிக்க செல்லாமல் இருந்து விடுவார்களா என்ற கேள்வி நீங்கள் கேட்க போகிறீர்களா ??

நிற்க, அதற்கு முன் கல்லூரி செல்லும் பெண்களின் பெற்றோர்களின் மனநிலையை கொஞ்சம் பரிசோதித்து விட்டு கேளுங்கள். பெரும்பான்மையான பெற்றோர்கள் பயந்துபோய் தான் உள்ளனர். இதுதான் அவர்களின் துவக்கம்.

மீண்டும் சொல்கிறேன்..,

#பெரியார் காலத்திற்கே நம்மை கொண்டு செல்ல அவர்கள் ஒவ்வொன்றாக அரங்கேற்றம் செய்கின்றனர்.
#அவர்கள்_கல்வியில்_இருந்து_துவங்குகிறார்கள்.

#நாகோ

ஒரு நுழைவுத்தேர்வு எழுத தமிழக மாணவர்கள் கேரளத்திற்கும், ராஜஸ்தானிற்கும் செல்வதை எதிர்த்து எதுவும் செய்ய வக்கில்லாமல்…

Posted by Rasigan NaaGo on Thursday, May 3, 2018

ஒரு நுழைவுத்தேர்வு எழுத தமிழக மாணவர்கள் கேரளத்திற்கும், ராஜஸ்தானிற்கும் செல்வதை எதிர்த்து எதுவும் செய்ய வக்கில்லாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு. செய்ய முடியவில்லையா, அல்லது செய்ய துணிவில்லையா ??

மூன்றாவது முறையாக மீண்டும் சொல்கிறேன். ஆம்,

“அவர்கள் கல்வியில் இருந்து தொடங்குகிறார்கள்”.

#NEET_Entrance #NEET #TNAgainstNEET

#ADMKBetraysTN

முதல் இரண்டு முறை எதற்கு சொன்னேன் என்பதை பின்னூட்டத்தில் பார்க்கவும்.

Posted by Rasigan NaaGo on Thursday, April 19, 2018