இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2008, அக்டோபர் 31 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் முழுயடைப்பு நடைப்பெற்றது .
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என 2008, நவம்பர் 12 ஆம் நாள் சட்டப்பேரவையில் கலைஞர் முன்மொழிந்த தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது.
2008, நவம்பர் 25 ஆம் நாள் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. ( இதில் அதிமுக , மதிமுக , தேமுதிக பங்கேற்கவில்லை) .
2008,டிசெம்பர் 4ஆம் நாள் கலைஞர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் புது தில்லி சென்று இலங்கையில் அமைதி திரும்ப தேவையான நடவெடிக்கை எடுக்குமாறு மன்மோகன் சிங்கை வலியுறித்தினர் .
2009 ஜனவரி 2 ஆம் நாள் கிளிநோச்சியையும் , 26 ஆம் நாள் முல்லைத்தீவையும் இலங்கை இராணுவம் கைப்பற்றியது.
2009 , ஜனவரி 29 ஆம் நாள் சட்டப்பேரவையில் இனமான பேராசிரியர் “திமுக விடுதலைப்புலிகளுக்கு ஆதராவாகவும் இல்லை எதிராகவும் இல்லை – இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு பற்றியே கவலைக் கொள்கிறது “ என்று தெரிவித்தார்.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று 2009,பிப்ரவரி 8 ஆம் நாள் சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டனர் .
2009 , பிப்ரவரி 17 ஆம் நாள் புது தில்லியில் திமுக அமைச்சர் திரு.துரை முருகன் தலைமையில் முன்னாள் நீதிபதிகள் , பேராசிரியர்கள் குடியரசு தலைவரை சந்தித்து போர் நிறுத்ததை கொண்ட வர வற்புறித்தினர் .
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர 2009 ,பிப்ரவரி 21 ஆம் நாள் திமுக இளைஞர் அணி மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.
2009 , ஏப்ரல் 6ஆம் நாள் புதுக்குடியிருப்பை இலங்கை இராணுவம் கைப்பற்றியது.விடுதலைப்புலிகள் காட்டிற்குள் பின்வாங்கச் செய்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை என்றால் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும் என்று 2009 – ஏப்ரல் 17 ஆம் நாள் கலைஞர் சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் வற்புறித்தினார் .
மீண்டும் 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் கலைஞர் கேட்டுக் கொண்டிதற்கிணங்க முழுக் கடையெடுப்பு நடைப்பெற்றது.
2009 , ஏப்ரல் 24 ஆம் நாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலைஞரை சந்தித்து இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும் என்று உறுதியளித்தார்.
இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்தாத காரணத்தால் 2009 – ஏப்ரல் 27 ஆம் நாள் , காலை 06:00 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் 85 வயதில் சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்ற முதுகெலும்பு சிகிச்சை செய்து கொண்ட கலைஞர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் .
ஏப்ரல் 27 ஆம் நாள் 12:20 மணிக்கு ப.சிதம்பரம் கலைஞரை தொடர்பு கொண்டு போரை நிறுத்தி வைக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டதை கலைஞரிடம் தெரிவித்தார். கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
நிற்க ..
இந்த கலைஞரை தான் இராஜபக்ஜேவை காட்டிலும் கலைஞர் மோசமானவர் என்று பிரபாகரன் சொன்னதாக சீமான் சொல்கிறார் . சீமான் இதை நேராக சொல்லிவிட்டார் . தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு போர்வையில் இருக்கும் பலர் இதை மறைமுகமாக சொல்கின்றனர்.
இவர்கள் கலைஞருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை – ஈழத்தாய் என்றும் பாஜக வந்தால் தனி ஈழம் அமையும் என்றும் ஈழ தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து துரோகம் செய்துவருகின்றனர் .