26.08.1967 அன்று பெரியார் ஆற்றிய உரை . அதாவது திமுக ஆட்சியில் ஆற்றிய உரை .
வயதாகி விட்டதே – கஞ்சி யார் ஊற்றுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம் என்ற வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகையில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக்க வேண்டும் . இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம்.
மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழிய, சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யாவிட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கிறதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம்.
அது பாகிஸ்தானாக இருந்தாலென்ன? ரஷ்யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண்டியதெல்லாம் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மேல் நாட்டு மக்களைப் போல் வாழ வேண்டுமென்பது தான்.
இவ்வாறாக பெரியார் சொன்னார் .
அதுவும் எப்போது ?
இந்த அமைச்சரவையே உங்களுக்கு (பெரியாருக்கு) தான் காணிக்கை என்று அண்ணா சொன்ன பிறகு .
சரி என்ன நடந்தது ?
கைம் பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டது கலைஞர் ஆட்சியில்.
கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர் கலைஞர் .
பெரியார் என்னும் institution கலைஞர் , அண்ணா வை கொண்டு system த்தை செதுக்கியது .
பெரியார் – அண்ணா – கலைஞர் இம்மூவர் சமூக நீதியை மிக நுட்பமாக கையாண்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று .